தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவு - தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு, தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.
பேராசிரியர் அன்பழகன். வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. . இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தசூழலில் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.
இந்நிலையில் தி.மு.க கட்சியின் சார்பாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், திமுக கொடிகள் யாவும் ஒரு வாரம் அரைகம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story