கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக பக்தர்கள் 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு


கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக பக்தர்கள் 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி - எடப்பாடி பழனிசாமி உத்தரவு
x
தினத்தந்தி 7 March 2020 3:45 AM IST (Updated: 7 March 2020 4:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக பக்தர்கள் 10 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை, 

கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்மஸ்தலாவுக்கு புனித பயணம் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அந்த மாநிலம், ஹசன் மாவட்டம், குனிக்கல் என்ற இடத்தில் தமிழக பக்தர்கள் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம், சிக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர செய்தி கிடைக்கப்பெற்றவுடன் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த்துறையினர் மற்றும் காவல் துறையினர் அடங்கிய ஒரு குழுவை கர்நாடக மாநிலத்துக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படியும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும் படியும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், விபத்தில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாயும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story