மாநகராட்சி பூங்காவில் ‘வை-பை’ வசதி


மாநகராட்சி பூங்காவில் ‘வை-பை’ வசதி
x
தினத்தந்தி 7 March 2020 1:53 PM IST (Updated: 7 March 2020 1:53 PM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி பூங்காவில் ‘வை-பை’ வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை, 

சென்னை தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள லஸ் நிழற்சாலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள நாகேஷ்வரராவ் பூங்காவில் பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் ‘வை-பை’ வசதியை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மொத்தம் 669 பூங்காக்கள் அமைந்துள்ளது. முதல் கட்டமாக தியாகராய நகரில் உள்ள நடைபாதை வளாகத்தில் ஏற்கனவே ‘வை-பை’ வசதி அமைக்கப்பட்டது. தொடர்ந்து லஸ் நிழற்சாலையில் அமைத்துள்ள நாகேஷ்வராவ் பூங்காவில் இந்த வசதி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த ‘வை-பை’ வசதி 24 மணி நேரமும் தடையில்லாமல் வழங்கப்படும். இந்த பூங்காவில் 8 தூண்களில் ‘வை-பை’ ஹாட்ஸ்பாட் வசதி அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு தூணில் உள்ள ‘வை-பை’ ஹாட்ஸ்பாட் வசதியில் 250 முதல் 300 நபர்கள் பயன்படுத்தலாம். ‘வை-பை’ தொடக்க விழா நிகழ்ச்சியில் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.நடராஜ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story