திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா; முருகனின் புகழ்பாடி வியப்பில் ஆழ்த்திய சிறுமி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா; முருகனின் புகழ்பாடி வியப்பில் ஆழ்த்திய சிறுமி
x
தினத்தந்தி 7 March 2020 5:37 PM IST (Updated: 7 March 2020 5:37 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறுமி ஒருவர் தொடர்ச்சியாக அரைமணி நேரம் முருகனின் புகழ்பாடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கோலாகலமுடன் நடந்து வருகிறது.  இந்த திருவிழாவின் 9வது நாளில், கோவிலின் கலையரங்கில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஸ்ரீநிதி (வயது 6) என்ற சிறுமி, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, திருமுருகாற்றுப்படை போன்ற இலக்கியங்கள் வழி தொடர்புப்படுத்தி முருகனின் பெருமையை, சுமார் அரைமணி நேரம் தொய்வில்லாமல் பேசினார்.  இதனால், சிறுமியின் சொற்பொழிவை கேட்பதற்காக திரளாக கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர்.

Next Story