படித்த பெண்கள் கூலி வேலைக்கு செல்லும் நிலை அதிகரிப்பு - கி.வீரமணி வேதனை
படித்த பெண்கள் கூலி வேலைக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை,
மக்கள் தொகையில் சரி பாதி பெண்கள் என்ற நிலை மாறி, ஆண்டுக்கு ஆண்டு உலகில் பெண்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்து வருவது ஏன் என்பது சிந்தனைக்குரியதும், கவலைக்குரியதுமாகும். இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துக்கொண்டே போகிறது. நாள் ஒன்றுக்கு 63 திருமணமான பெண்கள் தற்கொலை என்பது எதை காட்டுகிறது? படித்த பெண்களுக்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காததால் கூலி வேலைகளுக்கு செல்லும் நிலை இந்தியாவில் அதிகரிக்கிறது. தமிழகத்தில் கோவையில் எம்.எஸ்.சி. படித்த ஒரு பெண், துப்புரவு பணியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
சட்டப்படியான வயது அடைந்த ஆணும், பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்வதை நாடக காதல் என்பதும், சாதி வெறியால் பெற்றோர்களே கூட தங்கள் பிள்ளைகளை படுகொலை செய்வதும் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்படவேண்டும். மகளிர் காவல் நிலையங்கள் நாடு தழுவிய அளவில் விரிவாக்கம் செய்யப்படவேண்டும்.
அதன் நோக்கம் நிறைவேறும் வகையிலும் அவை செயல்படவும் வேண்டும். ஆணவ கொலையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கால தாமதம் செய்யாமல் கடுமையான தண்டனை அளிக்க வகை செய்யப்படவேண்டும். பெண்கள் உரிமை என்பது வெறும் சடங்காச்சாரமாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story