ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2020 11:30 PM GMT (Updated: 8 March 2020 11:28 PM GMT)

ரஜினிகாந்த், கமல்ஹாசன் சேர்ந்து வந்தாலும் அ.தி.மு.க. ஒற்றையாக சமாளிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை, 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஔவையார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்பட அமைச்சர்கள் நேற்று மரியாதை செலுத்தினார்கள். அப்போது அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரஜினிகாந்த் உள்பட யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் அங்கீகாரம் கொடுப்பது மக்கள் தான். யாருடன் கூட்டணி வைக்கிறார்கள். எந்த மாதிரியான கொள்கைகளை முன் வைக்கிறார்கள். இது எல்லாம் மக்கள் மத்தியில் எடுபட வேண்டும்.

எங்களை பொறுத்தவரையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என எத்தனை பேர் சேர்த்து வந்தாலும் சரி, ஒற்றையாக இருந்து நாங்கள் சமாளிப்போம். நீந்த தெரிந்தவர்களுக்கு ஆழத்தை பற்றி கவலை கிடையாது.

கடலில் கூட அ.தி.மு.க. நீந்தி கரை சேர்ந்து விடும். ஆனால் மற்றவர்கள் கரை சேர்வார்களா? என்பது தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story