சிங்கப்பெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சிங்கப்பெருமாள்கோவில்- செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில்கள் இன்று பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 9.02, 9.32, 10.08, 10.56, 11.48 மதியம் 12.15 மணி மற்றும் கடற்கரை-அரக்கோணம் இடையே காலை 9.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று(புதன்கிழமை) சிங்கப்பெருமாள்கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* செங்கல்பட்டு-கும்மிடிப்பூண்டி இடையே காலை 10.30, செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.55, 11.30 மதியம் 12.20, 1, 1.50, 2.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று செங்கல்பட்டு-சிங்கப்பெருமாள் கோவில் இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story