திண்டிவனம் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும் - ஐகோர்ட்டு உத்தரவு
திண்டிவனம் தொகுதியில் தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடந்தபோது, திண்டிவனம் தொகுதியில் தி.மு.க. சார்பில் சீத்தாபதி சொக்கலிங்கம், அ.தி.மு.க. சார்பில் ராஜேந்திரன் உள்பட 11 பேர் போட்டியிட்டனர். இதில், 101 ஓட்டுகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சீத்தாபதி சொக்கலிங்கம் வெற்றி பெற்றார்.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரன் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ததோடு, தி.மு.க. எம்.எல்.ஏ வெற்றி பெற்றது செல்லும் என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story