மயிலாடுதுறையில் 14-ந்தேதி நடைபெறுவதாக இருந்த டாக்டர் ராமதாஸ் பாராட்டு விழா ஒத்திவைப்பு


மயிலாடுதுறையில் 14-ந்தேதி நடைபெறுவதாக இருந்த டாக்டர் ராமதாஸ் பாராட்டு விழா ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 March 2020 11:11 AM IST (Updated: 11 March 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் 14-ந்தேதி நடைபெறுவதாக இருந்த டாக்டர் ராமதாஸ் பாராட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்ததற்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு விவசாய அமைப்புகளின் சார்பில், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் வரும் 14-ந்தேதி பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த விழா ஒத்திவைக்கப்படுகிறது. பாராட்டு விழா நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட தகவல் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story