மாநில செய்திகள்

திருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு + "||" + Thiruvalluvar University circulated ban High Court orders

திருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு

திருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை - ஐகோர்ட்டு உத்தரவு
திருவள்ளுவர் பல்கலைக்கழக சுற்றறிக்கைக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், கடந்த ஜனவரி 24-ந்தேதி, தன்னிடம் இணைப்பு பெற்ற கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘வருடாந்திர ஆய்வுக்கு ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும். ஆய்வு கட்டணமாக ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை, 18 சதவீத ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும். ஆய்வுக்கு பதிவு செய்யாத கல்லூரிகள் 2020-21-ம் கல்வியாண்டு பாடப்பிரிவுகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது‘ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் மரிய அந்தோணிராஜ் உள்பட 3 பேர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், பல்கலைக்கழகத்தின் சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கிற்கு 6 வாரத்துக்குள் பதில் அளிக்க திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பதிவாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.