31-ந் தேதி கடைசி நாள்: காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு - தபால்துறை அறிவிப்பு


31-ந் தேதி கடைசி நாள்: காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு - தபால்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 15 March 2020 9:00 PM GMT (Updated: 15 March 2020 8:44 PM GMT)

காலாவதியான ஆயுள் காப்பீடு பாலிசிகளை வருகிற 31-ந் தேதி வரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தபால்துறை அறிவித்துள்ளது.

சென்னை,

தபால் நிலைய ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் நிலைய ஆயுள் காப்பீடு பாலிசிதாரர்கள் முதல் முறையாக பிரீமியம் செலுத்தாத நாளில் இருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலத்துக்கு பிரீமியம் செலுத்தப்படாமல் தொடர்ச்சியற்ற மற்றும் காலாவதியான பாலிசிகள் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு விதிகளின்படி ஏப்ரல் 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு புதுப்பித்துக்கொள்ளும் தகுதி உள்ளவை அல்ல.

இருப்பினும், கடைசி பிரீமியம் செலுத்துவதற்கான தேதியில் இருந்து 5 ஆண்டுகள் என்ற வரம்பைக் கடந்திருந்தால் அத்தகைய பாலிசிகளை ஒருமுறை வாய்ப்பாக வருகிற 31-ந் தேதி வரை புதுப்பித்துக்கொள்ளலாம். இதற்கு நல்ல ஆரோக்கியத்திற்கான மருத்துவ சான்றிதழ் அளிக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய பாலிசிகளை வைத்திருந்து காப்பீட்டுப் பயன்களைப் பெற விரும்பும் பாலிசிதாரர்கள் அருகில் உள்ள எந்த தபால் நிலையத்திலும் எழுத்துப்பூர்வமாக விண்ணப்பிக்கலாம்.

வருகிற 31-ந் தேதிக்கு பிறகு இத்தகைய பாலிசிகள் புதுப்பிக்கப்படமாட்டாது. இவ்வாறு காலாவதியான பாலிசிகள் விதிகளின்படி ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும்.

மேற்கண்ட தகவல் சென்னை தலைமை தபால் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story