மாநில செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை + "||" + Coronavirus antiviral activity Until 31st coming Holidays for elementary schools in Puducherry

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: வருகிற 31 ந்தேதி வரை புதுச்சேரியில் தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை
புதுவையில் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை தொடக்கப் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.
புதுச்சேரி, 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. எனவே நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதுவை மாநிலத்தில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு் வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாநில எல்லைகளில் பரிசோதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் (பிரிகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை) இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இது குறித்து புதுவை அரசு பள்ளிக்கல்வி இயக்குனர் ருத்ரகவுடு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளிகளுக்கு இன்று (திங்கட்கிழமை)முதல் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

பள்ளி நிர்வாகங்கள் எக்காரணத்தை கொண்டும் மேற்கூறிய வகுப்புகளை நடத்தக்கூடாது. மீறும் பட்சத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா எனும் வைரஸ் தொற்றுநோயிலிருந்து சிறு குழந்தைகளை காக்கும் பொருட்டு, மறு அறிவிப்பு வரும் வரை, அனைத்து அரசு மற்றும் தனியார் தொடக்க பள்ளி (எல்.கே.ஜி முதல் 5 வகுப்பு வரையிலான) மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 29 ஆக உயர்வு
புதுச்சேரியில் புதிதாக 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 29ஆக உயர்ந்துள்ளது.
2. புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவு
புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
3. புதுச்சேரியில் ஏப்.30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
புதுச்சேரியில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
4. புதுச்சேரியில் புதிதாக 2 பேருக்கு கொரோனா பாதிப்பு
புதுச்சேரியில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
5. புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் முதல்வர் நாராயணசாமி..!
புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டைத் முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.