மாநில செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம் + "||" + The water level of the Bhawanisagar Dam

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 93.02 அடியாக உள்ளது.
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி ஆகும். அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மிதமான அளவில் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து  பவானிசாகர் அணை நீர்மட்டம் நேற்று காலை நேர நிலவரப்படி 93.12 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 749  கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. நீர் இருப்பு 23.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக  800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது

இந்நிலையில், இன்று காலை நேர நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.02 அடியாக உள்ளது. நீர்வரத்து நேற்றிலிருந்து 223 கனஅடி தண்ணீர் குறைந்து அணைக்கு வினாடிக்கு 526  கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர் இருப்பு 23.6 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக  800 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து நன்செய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
2. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பவானி சாகர் அணையில் இருந்து 14 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியுள்ளது.
4. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 26 வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
5. பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை எட்டியது
பவானிசாகர் அணை நீர்மட்டம் 97 அடியை எட்டியது.

ஆசிரியரின் தேர்வுகள்...