மாநில செய்திகள்

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் + "||" + For the prevention and protection of coronavirus virus in Puducherry Allocation of Rs 7.5 crore Health Minister Malladi Krishnarao

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு - சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் கூறினார்.
புதுச்சேரி,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. எனவே நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி புதுவை மாநிலத்தில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு் வருகிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மாநில எல்லைகளில் பரிசோதிக்கப்படுகின்றனர். விமான நிலையத்திலும் வெளிநாட்டு பயணிகள் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் (பிரிகேஜி முதல் 5-ம் வகுப்பு வரை) இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரியில் கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.