மாநில செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் + "||" + Masks to be given to State bus drivers and conductors; Minister MR. Vijayabaskar

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை,

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களையும் வரும் 31ந்தேதி வரை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.  இதேபோன்று திரையரங்குகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் பார்கள், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அனைத்து விளையாட்டு அரங்குகளையும் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.  மாநாடு, ஊர்வலம், கருத்தரங்கு நடத்த தடை விதிக்கப்பட்டது.

தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இந்நிலையில், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, தமிழக அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்.

குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளில் போர்வைகள் வழங்க தடை விதிக்கப்படும்.  பேருந்துகளின் ஜன்னலோரம் மற்றும் பிற பகுதிகளில் உள்ள திரைச்சீலைகளும் அகற்றப்படும்.

கால்டாக்சிகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் தூய்மை பணிகள் மேற்கொள்வதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா
திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்துள்ளேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.
2. துளிகள்
இங்கிலாந்து அணியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதால் கோபத்தில் ஓய்வு பெறுவது குறித்து 100 சதவீதம் சிந்தித்ததாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார்.
3. ‘உலக கோப்பையை வெல்ல மேலும் ஒருமுறை முயற்சிப்பேன்’; கேப்டன் மிதாலிராஜ் பேட்டி
‘உலக கோப்பையை வெல்ல மேலும் ஒருமுறை முயற்சிப்பேன்’ என கேப்டன் மிதாலிராஜ் பேட்டியில் கூறியுள்ளார்.
4. கதை தேர்வில் பக்குவமான நடிகை டாப்சி
கதைகளை தேர்வு செய்யும் அளவுக்கு பக்குவம் பெற்றேன் என நடிகை டாப்சி கூறியுள்ளார்.
5. அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது; மைக் பாம்பியோ பேட்டி
அமெரிக்கா உள்பட பல நாடுகளின் நம்பிக்கையை இந்தியா சம்பாதித்துள்ளது என அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி மைக் பாம்பியோ பேட்டியில் கூறியுள்ளார்.