ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு


ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்கள் உருவாக்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 March 2020 3:48 PM GMT (Updated: 17 March 2020 3:48 PM GMT)

ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க உள்ளோம் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையில், கால்நடை துறை மானிய கோரிக்கை விவாதம் இன்று நடந்தது.  இதில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. உதயசூரியன், சின்னசேலத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் நிலம் இருக்கும்பொழுது, கால்நடை பூங்காவை சேலம் மாவட்டத்தில் அமைத்தது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவர், இது ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மறு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் உள்ளது என சாடினார்.  இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதல் அமைச்சர், சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ள நாட்டின ஆடு, மாடுகளை பாதுகாக்கவும், கலப்பின பசுக்களை உருவாக்கவும் கால்நடை பூங்கா அமைக்கப்பட்டது.  ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும் கலப்பின பசுக்களை உருவாக்க உள்ளோம் என கூறினார்.

பின்னர் அவர், கள்ளக்குறிச்சியை மாவட்டமாக்கி, மருத்துவ கல்லூரியும் கொடுத்து திருப்தி இல்லை என்றும் கூறினார்.

Next Story