மாநில செய்திகள்

நெல்லை, கோவை, தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் அறிகுறி + "||" + Coronavirus Virus Syndrome in Paddy, Coimbatore and Thoothukudi

நெல்லை, கோவை, தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் அறிகுறி

நெல்லை, கோவை, தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் அறிகுறி
நெல்லை, கோவை மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் காணப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னை,

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் அதிகரித்து உள்ளது.  நேற்று முன்தினம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்து இருந்தது.  இந்த எண்ணிக்கை நேற்று 114 ஆகவும், இன்று 125 ஆகவும் உயர்ந்தது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 137 ஆக இன்று உயர்ந்துள்ளது என தெரிவித்து உள்ளது.  தமிழகத்தில் ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  அவர் உடல்நலம் சீரடைந்து சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளார்.

இதனிடையே, நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 2 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இதேபோன்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் 6 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

அசாமில் இருந்து தூத்துக்குடி வந்த ஒருவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டு உள்ளது.  இதனால் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  தமிழகத்தில் இதுவரை ஒருவரை தவிர யாரும் வைரசால் பாதிக்கப்படாத நிலையில் திடீரென்று பலருக்கு இந்த அறிகுறி காணப்படுவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.