மாநில செய்திகள்

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.984 சரிவு: ஒரு பவுன் ரூ.30,560-க்கு விற்பனை + "||" + Gold price plummeted to Rs.984 per pound in one day: sales at Rs.30,560 per pound

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.984 சரிவு: ஒரு பவுன் ரூ.30,560-க்கு விற்பனை

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.984 சரிவு: ஒரு பவுன் ரூ.30,560-க்கு விற்பனை
தங்கம் விலை ஒரே நாளில் நேற்று பவுனுக்கு ரூ.984 சரிந்து, ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னை, 

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை சரிந்து வருகிறது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 880-க்கு விற்பனை ஆனது. அதன்பின்னர், சற்று விலை அதிகரித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ஒரு பவுன் ரூ.33 ஆயிரத்து 328-க்கு விற்பனை ஆகி, வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

இந்த நிலையில் இந்த மாதம் ஆரம்பத்தில் விலை உயர்வை நோக்கி சென்றாலும், கடந்த 7-ந் தேதியில் இருந்து தங்கம் விலை குறைய தொடங்கியது. அவ்வப்போது இடையில் ஓரிரு நாட்கள் விலை அதிகரித்தாலும், பெருமளவில் உயரவில்லை. அந்த வகையில் நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.72 உயர்ந்து இருந்தது. நேற்று அதிரடியாக சரிந்து காணப்பட்டது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 943-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 544-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.123-ம், பவுனுக்கு ரூ.984-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 820-க்கும், ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்து 560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.394-ம், பவுனுக்கு ரூ.3 ஆயிரத்து 152-ம் சரிந்துள்ளது.

வெள்ளி விலையும் அதேபோல் சரிந்து கொண்டே வருகிறது. நேற்று கிராமுக்கு 2 ரூபாய் 70 காசும், கிலோவுக்கு ரூ.2 ஆயிரத்து 700-ம் குறைந்து, ஒரு கிராம் 38 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ ரூ.38 ஆயிரத்து 100-க்கும் விற்பனை ஆனது.

இதுகுறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-

‘கொரோனா வைரஸ் தாக்கத்தால் எல்லா துறையும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து தொடர்பு ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே இல்லாததால், தங்கத்தின் மீது முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், அமெரிக்க பெடரல் வங்கி கூட்டமைப்பில் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் தங்கம் விலை சரிந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சரிவு குப்பை வண்டியில் ஏற்றி சென்றனர்
தர்மபுரி பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை சரிவால் அவற்றை குப்பை வண்டியில் நகராட்சி ஊழியர்கள் ஏற்றி சென்றனர்.
2. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்தது
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்து ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 616க்கு இன்று விற்பனையாகிறது.
3. கொரோனா வைரஸ் வதந்தியால் விற்பனை சரிவு: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் ஒரு முட்டை விலை ரூ.1.25
கொரோனா வைரஸ் வதந்தியால் விற்பனை சரிவடைந்த நிலையில், நாமக்கல் கோழிப்பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.1.25-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
4. சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு ரூ.980 குறைவு
சென்னையில் தங்கம் விலை ஒரே நாளில் பவுன் ஒன்றுக்கு இன்று ரூ.980 குறைந்துள்ளது.
5. கொரோனா வைரஸ், பறவை காய்ச்சல் பீதி: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 2 நாட்களில் 58 காசுகள் சரிவு
கொரோனா வைரஸ் தொடர்பான வதந்தி மற்றும் பறவை காய்ச்சல் பீதி காரணமாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 2 நாட்களில் 58 காசுகள் சரிவடைந்து 265 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.