கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை


கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை மூட கோரிக்கை
x
தினத்தந்தி 18 March 2020 8:30 PM GMT (Updated: 18 March 2020 4:55 PM GMT)

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் கு.பால்பாண்டியன் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசும், பணியாளர்களை பாதுகாக்க தொடர்புடைய நிறுவனங்களும் போர்க்கால அடிப்படையில் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி, டாஸ்மாக் பணியாளர்களுக்கு முகக்கவசம் மற்றும் கை சுத்திகரிப்பான் வழங்கிடவும், சில்லரை மதுபான கடைகளுடன் தொடர்புடைய மது பார்களை 31-ந்தேதி வரை மூடவும் உத்தரவு பிறப்பித்துள்ளதை வரவேற்கிறோம்.

ஆனால், பெரும் எண்ணிக்கையிலான மது அருந்தும் பல்வேறு வகையான மக்களுடன் அன்றாடம் தொடர்பு கொள்ளும் டாஸ்மாக் பணியாளர்களை கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்க டாஸ்மாக் சில்லரை மதுபான கடைகளையும் 31-ந்தேதி வரை மூட வேண்டியது அத்தியாவசியமாகும் என கருதுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story