மாநில செய்திகள்

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க கூடாது - மத்திய பெட்ரோலிய மந்திரியிடம் வைகோ கோரிக்கை + "||" + Oil pipelines should not be impounded - Vaiko demands to the Union Petroleum Minister

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க கூடாது - மத்திய பெட்ரோலிய மந்திரியிடம் வைகோ கோரிக்கை

விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க கூடாது - மத்திய பெட்ரோலிய மந்திரியிடம் வைகோ கோரிக்கை
விளைநிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்க கூடாது என்று மத்திய பெட்ரோலிய மந்திரியிடம் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை, 

கொங்கு மண்டலத்தில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் விளைநிலங்களில் பெட்ரோலியம் எண்ணெய் குழாய்கள் பதிக்கக் கூடாது. நெடுஞ்சாலைகளை ஒட்டியே கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி ஆகியோர் பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானை நாடாளுமன்ற வளாகத்துக்குள் சந்தித்து விண்ணப்பம் அளித்தனர்.

இந்த விண்ணப்பத்தில் திருப்பூர் எம்.பி. சுப்பராயன், நாமக்கல் எம்.பி. ஏ.கே.சின்ராஜ் ஆகியோரும் கையெழுத்திட்டு உள்ளனர்.