மாநில செய்திகள்

10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Cancellation of 10 express trains - Southern Railway notification

10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

10 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பயணிகள் கூட்டம் குறைந்த 10 எக்ஸ்பிரஸ் தெற்கு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னை, 

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்திலும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது. அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. இதன் காரணமாக ரெயில் பயணிகள் போக்குவரத்தை குறைத்து உள்ளனர்.

மேலும் ரெயில்களில் முன்பதிவு செய்தவர்களும் அதனை ரத்து செய்து வருகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் ரெயில்களில் பயணிகள் கூட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. பயணிகள் கூட்டம் குறைந்த 10 எக்ஸ்பிரஸ் தெற்கு ரெயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் 100 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.