மாநில செய்திகள்

பொதுத்தேர்வு நடக்கும் அறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு + "||" + Spray the disinfectant on common exam rooms - Director of School Education Announcement

பொதுத்தேர்வு நடக்கும் அறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு

பொதுத்தேர்வு நடக்கும் அறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு
பொதுத்தேர்வு நடக்கும் அறைகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை, 

அன்றாடம் பள்ளிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை மேற்கொண்டு சுகாதாரமாக இருக்கவும், அவ்வப்போது கைகளை உரிய கிருமிநாசினி, சோப்பு கொண்டு தூய்மைப்படுத்தி கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சோப்பு மற்றும் கிருமிநாசினி ஆகியவற்றை பள்ளியின் தனி கட்டண நிதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிதி மூலமாக வாங்கி கொள்ளலாம். தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி தேர்வு நடைபெறும் தினத்தன்று நகராட்சி, மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத்துறை அலுவலர்களை தொடர்புகொண்டு தேர்வு அறைகளில் தேர்வு தொடங்குவதற்கு முன்பு கிருமி நாசினியை தெளிக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.

தேர்வு எழுதுவதற்கு முன்பாக மாணவர்கள் சோப்பு, கிருமி நாசினிகள் மூலம் தங்கள் கைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும், தேர்வு மைய பள்ளியின் தலைமை ஆசிரியர், முதன்மை தேர்வு கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் மூலம் முதன்மை கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஆளில்லா குட்டி விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
2. கிராமங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு
கிராமங்களில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
3. கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் தீயணைப்புத்துறை வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
4. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினி - வீடு வீடாக இளைஞர்கள் தெளித்தனர்
கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க பாகூரில் இயற்கை முறையில் தயாரித்த கிருமி நாசினியை இளைஞர்கள் வீடு வீடாக தெளித்தனர்.
5. பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு: கொரோனா வைரஸ் காரணமாக களையிழந்த மாணவர்கள் கொண்டாட்டம்
பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று நிறைவுபெற்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மாணவ, மாணவிகளின் கொண்டாட்டம் களையிழந்தது.