மாநில செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Corona threat: nellai, Thoothukudi trains canceled - Southern Railway announcement

கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல்: நெல்லை, தூத்துக்குடி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கீழ்க்கண்ட ரெயில் கள் ரத்து செய்யப்படுகிறது.

அடுத்த மாதம்(ஏப்ரல்) 6, 13, 20-ந்தேதி இயக்கப்பட இருந்த சென்னை எழும்பூர்-தூத்துக்குடி(வண்டி எண்: 06003) சிறப்பு கட்டண ரெயில், ஏப்ரல் 7, 14-ந் தேதி தூத்துக்குடி-எழும்பூர்(82604) சுவிதா சிறப்பு ரெயில் மற்றும் 21-ந்தேதி இயக்கப்பட இருந்த தூத்துக்குடி-எழும்பூர்(06004) சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் தாம்பரம்-நாகர்கோவில்(06005) இடையே 8, 15-ந்தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(06006) 9, 16-ந்தேதி, நெல்லை-தாம்பரம்(06036) 2, 9, 16-ந்தேதி, தாம்பரம்- நெல்லை(82615) 3-ந்தேதி மற்றும் தாம்பரம்- நெல்லை (06035) இடையே 10, 17-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், நாகர்கோவில்-தாம்பரம்(06064) 6, 19-ந் தேதி, நாகர்கோவில்-தாம்பரம்(82624) 12-ந்தேதி, தாம்பரம்-நாகர்கோவில்(06063) 3, 10-ந்தேதி, நெல்லை-எழும்பூர்(82602) ஏப்ரல் 5, 12-ந் தேதிகளில் இயக்கப்படும் ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

இது தவிர பல்வேறு ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் அனைத்து முடிதிருத்தும் கடைகளும் திறப்பு - தொழிலாளர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினர்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து முடிதிருத்தும் கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. தொழிலாளர்கள் முககவசம் அணிந்து பணியாற்றினர்.
2. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் ஆட்டோக்கள் ஓடத்தொடங்கின குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை
நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் நேற்று ஆட்டோக்கள் ஓடத் தொடங்கின. குறைந்தபட்சம் 2 பேரை ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட 41 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் கிராமப்பகுதியில் சலூன் கடைகள் திறப்பு - பொதுமக்கள் முடிவெட்டி சென்றனர்
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கிராமப்பகுதியில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஏராளமான பொதுமக்கள் முடி வெட்டி சென்றனர்.
5. நெல்லையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டியது; தூத்துக்குடி, தென்காசியில் 21 பேர் பாதிப்பு
மராட்டியத்தில் இருந்து நெல்லைக்கு வந்த மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200-ஐ தாண்டி உள்ளது. இதேபோல், தூத்துக்குடி, தென்காசியில் 21 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.