மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிலவரம்


மேட்டூர் அணையின் நீர்மட்டம் நிலவரம்
x
தினத்தந்தி 20 March 2020 4:52 AM GMT (Updated: 20 March 2020 4:52 AM GMT)

மேட்டூர் அணை நீர்மட்டம் 103.7 அடியாக குறைந்ள்ளது.

மேட்டூர், 

தமிழகத்தின் 12 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக கடந்த பிப்ரவரி மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஒரு சில நாட்களில் தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. 

இருப்பினும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 105 அடிக்கும் மேல் இருந்த அணையின் நீர்மட்டம் குடிநீர் தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறப்பு மற்றும் அணைக்கு நீர்வரத்து குறைவு காரணமாக தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம்  103.81 அடியாக குறைந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 103.7 அடியாக குறைந்ள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 132 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 69.7 டிஎம்சி ஆக உள்ளது.

Next Story