ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்


ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 21 March 2020 6:36 AM GMT (Updated: 21 March 2020 6:36 AM GMT)

ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சென்னை

சுகாதாரத்துறை அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் முகக்கவசம், கிருமி நாசினி தெளிப்பான் போன்றவை அதிக விலைக்கு விற்பனை செய்த 32 கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது

பள்ளி, கல்லுாரி விடுமுறையை சுற்றுலாவிற்கான விடுமுறை போன்று கருதக்கூடாது. விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல் மத்திய அரசு, மாநில அரசு  சொல்லும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.

தமிழகம் முழுவதும் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 தமிழகத்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி இளைஞருடன் தொடர்பில் இருந்த 163 பேர் தனிமைப்படுப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன்ர். 

அயர்லாந்தில் இருந்து தமிழகம் வந்து கொரோனா தொற்றுக் கண்டறியப்பட்ட இளைஞருடன் தொடர்பில் இருந்த 94 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.

Next Story