கொரோனா அச்சுறுத்தல்: ஒரு மாத ஊதியம் வழங்கிய நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்


கொரோனா அச்சுறுத்தல்:  ஒரு மாத ஊதியம் வழங்கிய நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்
x
தினத்தந்தி 21 March 2020 4:33 PM GMT (Updated: 21 March 2020 4:33 PM GMT)

கொரோனா வைரஸ் பாதிப்பினை அடுத்து வருவாய் இழந்து பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் ஒரு மாத ஊதியம் வழங்கியுள்ளார்.

சென்னை,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது.  இதுவரை 298 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  தமிழகத்தில் 6 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் வருவாய் இழந்து பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம்,  2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இதற்காக தலைமை செயலாளர் சண்முகத்தை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, அதற்கான காசோலையை வழங்கினார்.

Next Story