மாநில செய்திகள்

அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; துரைமுருகன் + "||" + The public should have full cooperation with the government; Duraimurugan

அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; துரைமுருகன்

அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; துரைமுருகன்
அரசுக்கு பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் பாதித்துள்ளது.  இதுவரை 341 பேருக்கு நாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.  இந்தியாவில் தொற்றுநோய்க்கு பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

தமிழகத்தில் நேற்று வரை 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

தி.மு.க.வின் மூத்த தலைவரான துரைமுருகன் இன்று கூறும்பொழுது, அரசுக்கு பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

யாரும் வெளியே வராத போது  மக்கள் எவ்வளவு அச்சத்தில் உள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது.  சட்டமன்றத்தை உடனடியாக ஒத்தி வைக்க வேண்டும்.  இதேபோன்று, மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும்; அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
2. கொரோனா வைரஸ், மோடி என இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும்; கே.எஸ். அழகிரி
கொரோனா வைரஸ், மோடி என இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
3. 7 பேர் விடுதலை; கவர்னர் நல்ல முடிவை எடுத்திடுவார்: முதல் அமைச்சர் பழனிசாமி
7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக கவர்னர் நிச்சயம் நல்ல முடிவை எடுத்திடுவார் என முதல் அமைச்சர் பழனிசாமி சட்டசபையில் இன்று கூறியுள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை