மாநில செய்திகள்

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்தது + "||" + Gold price in Chennai declined by Rs.112

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்தது
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.112 குறைந்து ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 616க்கு இன்று விற்பனையாகிறது.
சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க கேட்டு கொண்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.112 குறைந்து ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 616க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதேபோன்று ஒரு கிராம் ரூ.3 ஆயிரத்து 952க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் பவுனுக்கு 40 ரூபாய் விலை குறைந்தது.  பின்னர், மாலையில் 72 ரூபாய் விலை குறைந்துள்ளது.  பங்கு சந்தை வீழ்ச்சி, கச்சா எண்ணெய் விலை சரிவு ஆகியவற்றால் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக வர்த்தகமாகி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இந்த நிலையில் இந்திய தங்க விற்பனை மற்றும் வர்த்தக சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி, தமிழகத்தில் அனைத்து தங்க நகை கடைகளையும் மூடும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. வாகனங்களில் வீதி, வீதியாக விற்பனை: கோவை காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் குறைந்தது
வாகனங்களில் வீதி, வீதியாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதால் கோவையில் உள்ள காய்கறி சந்தைகளில் மக்கள் கூட்டம் குறைந்தது.
2. கொரோனா பாதிப்பு குறைந்தது: ஆரஞ்சு நிற பட்டியலில் திண்டுக்கல் மாவட்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததால் திண்டுக்கல் மாவட்டம் ஆரஞ்சு நிற பட்டியலில் இடம் பிடித்தது.
3. இத்தாலியில் கொரோனா பலி எண்ணிக்கை குறைந்தது
இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
4. சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.3 ஆயிரம் உயர்வு
சென்னையில் ஆபரண தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து இன்று விற்பனையாகி வருகிறது.
5. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைந்தது - கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் தகவல்
சர்வதேச அளவில், பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.