நாளை முதல் 144 தடை :முக்கிய நகர பேருந்து நிலையங்களில் அலை மோதும் மக்கள் கூட்டம்


நாளை முதல் 144 தடை :முக்கிய நகர பேருந்து நிலையங்களில் அலை மோதும் மக்கள் கூட்டம்
x

நாளை மாலை முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை தொடர்ந்து பஸ்நிலையம்-மார்க்கெட்டுகளில் கட்டுக்கடங்காத கூட்டம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

சென்னை

நாளை (24-03-2020) மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்  கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்லும் மக்கள். குறைவான போருந்துகளே இயக்கப்படுவதால் இடம் பிடிக்க முண்டியடித்து பஸ்களில் ஏறுகின்றனர்.சென்னை கோயம்பேடு மற்றும் மாவட்ட எல்லை சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
அதுபோல்பெருங்காளத்தூர் பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்து உள்ளனர்

பண்டிகை காலங்களைபோல் மக்கள் கூட்டம் கூட்டமாகட் மார்க்கெட்டுகளிலும் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் கூடி உள்ளனர். இத்னால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

 திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. சேலம், மதுரை நாமக்கல், குமரி உள்ளிட்ட இடங்களுக்கு வழக்கத்தை விட குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்துகளில் ஏறியதுடன், கூடுதல் பேருந்துகளை இயக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தனியார் நிறுவன தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயத்தமானதால் திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. 

இதற்கிடையே செவ்வாய்கிழமை மாலை வரை பேருந்துகள் இயங்கும் என்றும், மக்கள் கூட்டமாக செல்வதை தவிர்க்குமாறும், போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் திண்டிவனம், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் இருந்து பேருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


Next Story