மாநில செய்திகள்

சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு - ப.தனபால் அறிவிப்பு + "||" + Assembly session to be completed today - The announcement of Mr. Dhanapal

சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு - ப.தனபால் அறிவிப்பு

சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு - ப.தனபால் அறிவிப்பு
சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடையும் என்று சபாநாயகர் ப.தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அறையில் நடைபெற்றது. பின்னர் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சபாநாயகர் ப.தனபால் சட்டசபையில் கூறியதாவது:-

இன்றைக்கு கூடிய அலுவல் ஆய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை எடுத்துக் கொள்வதற்கு ஏற்கனவே முடிவு செய்திருந்த மானியக் கோரிக்கைகளை 24-ந்தேதி அன்று (இன்று), விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் எடுத்துக் கொள்ளப்படும். மேலும் அரசின் சட்ட முன்வடிவு ஆய்வு செய்தலும், நிறைவேற்றலும், ஏனைய அரசின் அலுவல்கள் ஏதேனும் இருப்பின் அதுவும் எடுத்துக் கொள்ளப்படும்.

வினாக்கள்-விடைகள் நேரம் இல்லை என்றும் அலுவல் ஆய்வு கூட்டம் முடிவு செய்து உள்ளது. இதுகுறித்து ஒரு தீர்மானத்தை பேரவை முன்னவரான துணை முதல்-அமைச்சர் கொண்டு வருவார். இவ்வாறு சபாநாயகர் ப.தனபால் கூறினார்.

அதன்பேரில், அவை முன்னவரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 235 விதியின் கீழ் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். பின்னர், தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேறியது. அதன் அடிப்படையில், சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) நிறைவடைகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சட்டசபை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
2. சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க மறுப்பதாக கூறி எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு
சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க மறுப்பதாக கூறி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் கள் சட்டசபையை புறக்கணித்து வெளியேறினார்.
3. சட்டசபைக்குள் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் - தி.மு.க. எழுப்பிய ஒழுங்கு பிரச்சினை
சட்டசபைக்குள் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார்.
4. சட்டசபை கட்சி பதவியை பிரித்தால் விலகுவேன் காங்கிரஸ் மேலிடத்திற்கு சித்தராமையா எச்சரிக்கை
சட்டசபை கட்சி பதவியை பிரித்தால் விலகுவேன் என்று காங்கிரஸ் மேலிடத்திற்கு சித்த ராமையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. சட்டசபையில் ‘தினத்தந்தி’க்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி
சட்டசபையில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்தார்.