மாநில செய்திகள்

காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு + "||" + Construction of dye roads at Kancheepuram Anna Handloom Silk Park - Minister OS Maniyan

காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு

காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவிப்பு
காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அறிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழக சட்டசபையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதிலளித்துப் பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-

ஈரோடு சரகம் மற்றும் காஞ்சீபுரம் சரக உதவி இயக்குனர் அலுவலகங்களுக்கு சொந்தமாக புதிய அலுவலகக் கட்டிடம் கட்ட நிதி வழங்கப்படும்.

காஞ்சீபுரம் அண்ணா கைத்தறி பட்டு பூங்காவில் சாயச்சாலைகள் அமைக்கப்படும்.

தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் குடும்ப ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.32.76 கோடி ஒதுக்கப்படும்.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் நவீனப்படுத்தப்படும்.

வாடிக்கையாளர்களின் ரசனைக்கு ஏற்ப யுவா பட்டுப்புடவைகள், கோர்வை ஜமுக்காளங்கள், கை அச்சிட்ட பருத்தி சேலைகள், பார்டர் இணைந்த அச்சிடப்பட்ட போர்வை போன்ற புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 125 பேர் மீது வழக்கு - 300 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 125 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும் 300 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
2. காஞ்சீபுரம், நலத்திட்ட உதவிகள்
உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் பயனாளிகளுக்கு தையல் எந்திரம், சைக்கிள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
3. காஞ்சீபுரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
காஞ்சீபுரத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
4. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 39 லட்சம் வாக்காளர்கள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.
5. காஞ்சீபுரம், மனுநீதி நாள் முகாம்
காஞ்சீபுரம் அய்யங்கார்குளம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அய்யங்கார்குளம் கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.