மாநில செய்திகள்

‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி + "||" + Actors Suriya-Karthi donates Rs 10 lakh to FEFSI workers

‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி

‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் உதவி
‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு நடிகர்கள் சூர்யா-கார்த்தி ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்தனர்.
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பொதுமக்கள் அதிகமாக கூடும் வணிக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள் ஆகியவை மூடப்பட்டன. படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இதனால் தினக்கூலியாக இருக்கும் திரைப்பட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள்.

அவர்களுக்கு உதவும்படி, ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை ஏற்றுக்கொண்டு நடிகர் சிவகுமார், அவருடைய மகன்கள் நடிகர் சூர்யா, கார்த்தி ஆகிய மூன்று பேரும் ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்!
திறமையான நடிகர்கள் மற்றும் சிறந்த டைரக்டர்களை அழைத்து, அவர்களை மனம் திறந்து பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார், சூர்யா.
2. சர்ச்சையில் சூர்யாவின் ‘அருவா’ தலைப்பு
சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.
3. தீபாவளி விருந்தாக சூர்யா-ஹரி இணையும் 6-வது படம், `அருவா’
சூர்யா-ஹரி இணைந்து பணிபுரியும் 6-வது படத்துக்கு, `அருவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
4. இனி தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தால் மட்டுமே படப்பிடிப்பு தளங்களோடு ஒப்பந்தம் - பெப்சி தீர்மானம்
படப்பிடிப்பு தளத்தினர் திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்துடன் ஒப்பந்தம் போட்ட பின்னரே இனி பணியாளர்கள் தொழில் செய்ய முன்வருவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி கூறினார்.
5. படமாகும் குறுநாவலில், சூர்யா!
சூர்யா நடித்த ‘சூரரை போற்று’ படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து சூர்யா நடிக்கப்போகும் படம் எது, அந்த படத்தை இயக்கப் போகிறவர் யார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் இருந்தன. இந்த கேள்விகளுக்கு இப்போது விடை கிடைத்து இருக்கிறது.