தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் விஜய பாஸ்கர்


தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் விஜய பாஸ்கர்
x
தினத்தந்தி 24 March 2020 4:33 PM GMT (Updated: 24 March 2020 4:33 PM GMT)

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதுவரை உலக அளவில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சீனா தவிர்த்து, இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளது.  சீனாவில் பாதிப்பு பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 433 ஆக உயர்ந்து இருந்தது. தற்போது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்து உள்ளது.

இந்தசூழலில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியில் இருந்து 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் நியூசிலாந்தில் இருந்து வந்த 55 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், நியூசிலாந்தில் இருந்து வந்த மற்றொரு 65 வயது முதியவர் தனியார் மருத்துவமனையிலும், லண்டனில் இருந்து வந்த 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதித்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. 

Next Story