டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தமிழக சட்டசபையில் பலத்த கரவொலி எழுப்பி நன்றி

டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தமிழக சட்டசபையில் பலத்த கரவொலி எழுப்பி நன்றி தெரிவித்தனர்.
சென்னை,
கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோளுக்கு இணங்க கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் கரவொலி எழுப்பினர்.
இந்த நிலையில் தமிழக சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளில் அர்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் இதற்கு துணையாக செயல்படுகின்ற பிற துறைகளின் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்க வேண்டும்’ என்று கேட்டார்.
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அ.தி.மு.க. உறுப்பினர்கள், தனியரசு, கருணாஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பலத்த கரவொலி எழுப்பியும், மேஜையை தட்டியும் தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.
Related Tags :
Next Story