மாநில செய்திகள்

திரைப்பட தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி; விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தலா ரூ.10 லட்சம் வழங்கினர் + "||" + Rajinikanth helps film workers with Rs 50 lakh Vijay Sethupathi and Sivakarthikeyan paid Rs 10 lakh each

திரைப்பட தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி; விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தலா ரூ.10 லட்சம் வழங்கினர்

திரைப்பட தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் உதவி; விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் தலா ரூ.10 லட்சம் வழங்கினர்
திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கி உள்ளார்.
சென்னை, 

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலகம் முடங்கி உள்ளது. திரையரங்குகள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு நடிகர்-நடிகைகள் வீட்டில் இருக்கிறார்கள். திரைப்பட பணிகள் நின்று போனதால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

பெப்சியில் உள்ள 25 ஆயிரம் உறுப்பினர்களில் 10 ஆயிரம் பேர் தினசரி வேலைக்கு சென்று குடும்பம் நடத்தியவர்கள் என்றும், இவர்கள் வேலை இழப்பால் கஷ்டப்படுகின்றனர் என்றும், அவர்களுக்கு நடிகர்கள்-நடிகைகள் உதவ வேண்டும் என்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார். இதுபோல் நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கி உள்ளனர். சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து ஏற்கனவே பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் உதவி வழங்கி இருக்கிறார்கள்.

நடிகர் பார்த்திபன் 250 மூடை அரிசி வழங்கி உள்ளார். ஒவ்வொரு மூடையும் 25 கிலோ எடை கொண்டதாகும். நடிகர் மற்றும் இயக்குனர் மனோ பாலா 10 மூடை அரிசி வழங்கி உள்ளார். நடிகர் பிரகாஷ்ராஜ் 150 மூடை அரிசி வழங்கி உள்ளார்.

படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இன்றி கஷ்டப்படும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று நடிகர் சங்க தனி அதிகாரி கோரிக்கை விடுத்து இருந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரஸ் காரணமாக ஒட்டு மொத்த இந்திய திரையுலகமே முடங்கி உள்ளது. படப்பிடிப்பு தடையால் நடிகர் சங்க உறுப்பினர்களில் துணை நடிகர்-நடிகைகள், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நாடக நடிகர்கள் மற்றும் மாதந்தோறும் உதவி தொகை பெறும் மூத்த கலைஞர்கள் தினசரி வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே அவர்களின் அன்றாட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய நமது சங்கத்தை சேர்ந்த மனித நேய பண்பாளர்கள் நடிகர் சங்க வங்கிக்கணக்கில் தங்களால் இயன்ற நிதி வழங்கி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்த வேண்டுகோளை ஏற்று, வேல்ஸ் பல்கலைக்கழக தலைவரும், தயாரிப்பாளரும், நடிகர் சங்க உறுப்பினருமான ஐசரி கணேஷ் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கினார். இந்த தொகையை நடிகர் சங்க வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தார்.

அவர் கூறும்போது, கொரோனாவால் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவ நிதி திரட்ட வேண்டும் என்று தனி அதிகாரியிடம் நான் வற்புறுத்தியதற்கு இணங்க, அவரும் நிதி வழங்கக்கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நான் ரூ.10 லட்சம் நிதி வழங்கி உள்ளேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர்களுக்கு நன்றி -ரஜினிகாந்த்
எனது கருத்தை பாமர மக்களுக்கும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்து உள்ளார்.
2. ‘முதல்-அமைச்சர் ஆகமாட்டேன்’ - ரஜினிகாந்த் திட்டவட்ட அறிவிப்பு
கட்சிக்கு ஒரு தலைமையும், ஆட்சிக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், தான் முதல்-அமைச்சர் ஆகப்போவது இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
3. கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு- ரஜினிகாந்த்
கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு என ரஜினிகாந்த் கூறினார்.
4. மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று மீண்டும் சந்திப்பு - முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்
தனது அரசியல் நிலை குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று(வியாழக்கிழமை)தெரிவிக்கிறார். முன்னதாக அவர் மாவட்ட செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
5. பெரியார் பற்றி பேச்சு: ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு தள்ளுபடி - எழும்பூர் கோர்ட்டு உத்தரவு
பெரியார் பற்றி பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக்கோரிய மனுவை சென்னை எழும்பூர் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.