பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை


பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை
x
தினத்தந்தி 25 March 2020 2:50 AM GMT (Updated: 25 March 2020 2:50 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலையில், எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.45 ஆகவும், டீசல்  ரூ.65.87 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் தேதிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து மாற்றமில்லாமல் நீடித்து வருகிறது. 

Next Story