தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு


தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா  ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு
x
தினத்தந்தி 25 March 2020 9:47 AM GMT (Updated: 2020-03-25T18:11:42+05:30)

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா ; பாதிப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து உள்ளது

சென்னை

இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவைத் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 562 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மேலும் 5 பேருக்கு கொரோன வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் இதனை தெரிவித்து உள்ளார்.  கொரோனா உறுதியான 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.Next Story