மக்கள் அச்சப்பட தேவையில்லை: தட்டுப்பாடின்றி பால் கிடைக்கும் - ஆவின் நிர்வாகம் தகவல்


மக்கள் அச்சப்பட தேவையில்லை: தட்டுப்பாடின்றி பால் கிடைக்கும் - ஆவின் நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 26 March 2020 9:12 PM GMT (Updated: 26 March 2020 9:12 PM GMT)

மக்கள் அச்சப்பட தேவையில்லை: தட்டுப்பாடின்றி பால் கிடைக்கும் என்று ஆவின் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னை, 

தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவல்துறையினரின் கடுமையான கட்டுப்பாடுகள், அடக்குமுறை அராஜகங்களால் பால் முகவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதால் பால் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்கின்ற பாலினை சில்லரை வணிகர்களுக்கு வினியோகம் மற்றும் விற்பனை செய்ய முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

எனவே தமிழகம் முழுவதும் நாளை (இன்று) முதல் பால் முகவர்கள் அனைவரும் சில்லரை கடைகளுக்கு பால் வினியோகம் செய்வதில்லை என்றும், பால் முகவர்களின் கடைகளில் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டும் பால் தங்குதடையின்றி, தட்டுப்பாடு இல்லாமல் விற்பனை செய்வது என்றும் எங்களது சங்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் முகவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில், ஆவின் பாலகங்களில் எவ்வித தட்டுப்பாடின்றி எப்போதும் போல பால் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் ஆவின் பால் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Next Story