டாக்டர்கள், செவிலியர்களை போல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்


டாக்டர்கள், செவிலியர்களை போல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 26 March 2020 9:45 PM GMT (Updated: 2020-03-27T02:49:39+05:30)

டாக்டர்கள், செவிலியர்களை போல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டாக்டர்களுக்கும், செவிலியர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும் அரசு ஒருமாத சிறப்பு ஊதியம் வழங்கியதற்கு தே.மு.தி.க. சார்பில் வரவேற்கிறேன். அதே வகையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும், போலீஸ் துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஒருமாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

கடும் வெயிலையும் பாராமல் போலீசாரும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களும் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதனை கருத்தில் கொண்டு, இந்த பணிகளை செய்துவரும் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பாக எனது வாழ்த்துகளையும், வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story