மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 38 ஆக உயர்வு + "||" + Coronavirus virus rises to 38 in Tamil Nadu

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 38 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 38 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழக அரசு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.  மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் கூடுதலாக 3 பேர் பாதித்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது.  இதனை தமிழக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 4,021 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 4,021 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு; பலி எண்ணிக்கை 3,867 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 3,867 ஆக இன்று உயர்வடைந்து உள்ளது.
3. கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஆண்கள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
4. சென்னையில் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு
சென்னையில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்து உள்ளது.
5. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்