மாநில செய்திகள்

டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் - மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம் + "||" + Dasmak Stores Until the 14th Will remain closed Managing Director Project Circle

டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் - மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்

டாஸ்மாக் கடைகள் 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் - மேலாண்மை இயக்குனர் திட்டவட்டம்
சமூக வலைதளங்களில் வரும் செய்திக்கு மறுப்பு தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டுதான் இருக்கும் என்று அதன் மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
சென்னை, 

கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை தவிர இதர கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்க தடைவிதிக்கப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 299 டாஸ்மாக் கடைகளும் கடந்த 23-ந்தேதி மாலை 6 மணி முதல் மூடப்பட்டன. கடைகள் மூடப்படுவதால் மதுபிரியர்கள் அன்றைய நாளில் முண்டியடித்து சரக்குகளை வாங்கி பதுக்கினர். அன்றைய ஒரு நாள் மட்டும் 6 மணி நேரத்தில் (பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை) ரூ.210 கோடிக்கு மது விற்பனை ஆனது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கடந்த 2 நாட்களாக டாஸ்மாக் கடைகள் வருகிற 31-ந்தேதியில் இருந்து பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை இயங்கும் என்றும், இது அரசு உத்தரவு என்றும், ஏதோ செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது போன்ற தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமாரிடம் கேட்டபோது, ‘சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது. அரசு அறிவித்துள்ளபடி, டாஸ்மாக் கடைகள் வருகிற 14-ந்தேதி வரை மூடப்பட்டு தான் இருக்கும்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெறிச்சோடிய டாஸ்மாக் கடைகள்
மது விற்பனை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மதுப்பிரியர்களின் கூட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகின்றன.
2. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளின் விற்பனை நேரம் 2 மணி நேரம் நீட்டிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
3. டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பு: குமரியில் மது பிரியர்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்
டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. குமரியில் மது பிரியர்கள் போட்டி போட்டு மது பாட்டில்களை வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் கூட்டம் இல்லை.
4. தேனி மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள் - மதுபானங்களை மொத்தமாக அள்ளி சென்றனர்
தேனி மாவட்டத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை மொத்தமாக அள்ளி சென்றனர்.
5. டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 15 பேர் கைது
டாஸ்மாக் கடைகள் திறந்ததை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சி யினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை