டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - பணியாளர் சங்கம் கோரிக்கை


டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் - பணியாளர் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 30 March 2020 8:17 PM GMT (Updated: 30 March 2020 8:17 PM GMT)

டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை, 

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோதண்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தின் பல இடங்களில், ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் டாஸ்மாக் கடைகளை அமைத்து வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. தற்போது 144 தடை உத்தரவால் டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் திருடுபோக வாய்ப்பு இருப்பதாக கருதி, அந்த கடைகளின் சரக்குகளை அருகில் உள்ள டாஸ்மாக் கிடங்கு அல்லது திருமண மண்டபங்களில் கொண்டு வைக்குமாறு உத்தரவிட்டு வருகிறார்கள். இதனால் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

இது ஒருபுறமிருக்க கடையின் பாதுகாப்பிற்காக பணியாளர்களை அங்கேயே தூங்கச் சொல்வது என்பதும் மிகவும் வேதனையாக உள்ளது,

ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியில்கூட வர இயலாத நிலையில் இதுபோன்ற உத்தரவுகளால் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதால் பணியாளர்களின் குடும்பங்கள் அஞ்சும் நிலையும் ஏற்பட்டுள்ளது

எனவே, டாஸ்மாக் கடைகளுக்கு பாதுகாப்பு அளித்திட காவல்துறை மூலமோ அல்லது தனியார் செக்யூரிட்டி சர்வீஸ் மூலமாகவோ உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story