தொலைபேசி வாயிலாக விசாரணை: பெண் உள்பட 5 பேருக்கு இடைக்கால ஜாமீன் - ஐகோர்ட்டு உத்தரவு
தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி பெண் உள்பட 5 பேருக்கு இடைக்கால ஜாமீன் வ்ழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினால், சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, ஜாமீன் மனுக்களை ஐகோர்ட்டு நீதிபதி பி.ராஜமாணிக்கம் விசாரித்து வருகிறார். இவர், ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வீட்டில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாக மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் சென்னை பழைய வண்ணார்பேட்டையை சேர்ந்த ரேகா என்பவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுத்தார்.
அரசு தரப்பு வக்கீலும், மனுதாரர் தரப்பு வக்கீலும் தொலைபேசி வாயிலாக தங்களது வாதங்களை முன்வைத்து வாதாடினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரேகாவுக்கு வருகிற 27-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் போலீசாரால், கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட வி.மணிகண்டன், எம்.தண்டபாணி ஆகியோருக்கும் மேலும் இரு வழக்குகளில் 2 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story