ஓய்வு பெற இருந்த டாக்டர், செவிலியருக்கு 2 மாதம் பணிநீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
ஓய்வு பெற இருந்த டாக்டர், செவிலியருக்கு 2 மாதம் பணிநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட குழுவினருடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
31.3.2020 (நேற்று) ஓய்வு பெற உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர, தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும்.
உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.
பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விழித்திருப்போம், விலகியிருப்போம், வீட்டிலேயே இருப்போம், கொரோனாவை வெல்வோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story