கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை
கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் முதல்-மந்திரிகளுடன், பிரதமர் இன்று ஆலோசனை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பரவிவிடாதபடி நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் மட்டும் கொரோனா பரவல் சற்று அதிகமாக காணப்படுகிறது. எனவே இதுகுறித்து அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த ஏற்பாடுகளை செய்யும்படி பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான், அசாம், அரியானா, மராட்டியம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாநில முதல்-மந்திரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகம் சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலமாக இணைவார்.இந்த ஆலோசனை கூட்டத்தின்போது சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story