கொரோனா நிவாரண பணிக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.36 கோடி வசூல் - தமிழக அரசு தகவல்
கொரோனா நிவாரண பணிக்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 வசூலாகி இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை,
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அ.தி.மு.க. அரசு, கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர தடுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. இப்பணிகளுக்கு அனைத்து தரப்பு மக்களிடம் இருந்து வந்த ஆதரவை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 27-ந்தேதி பத்திரிகைகளின் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்த வேண்டுகோளினை ஏற்று, முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் மனமுவந்து நிதியுதவி வழங்கியவர்களின் விவரம் வருமாறு:-
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் ரூ.5 கோடி. சக்தி மசாலா நிறுவனம் ரூ.5 கோடி. ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ரூ.2 கோடி. சிம்சன்ஸ் நிறுவனம் ரூ.2 கோடி. சண்முகா நிறுவனம் ரூ.1.25 கோடி. எஸ்.ஆர்.மிஸ்ட் நிறுவனம் ரூ.1.15 கோடி. தமிழ்நாடு கவர்னர் அலுவலகம் ரூ.1 கோடி. தி.மு.க. அறக்கட்டளை ரூ.1 கோடி.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம்
நேஷனல் ரூ.1 கோடி. தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ரூ.1 கோடி. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் ரூ.1 கோடி. தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் ரூ.1 கோடி. பஞ்சாப் அசோசியேசன் ரூ.50 லட்சம். ஜி.ஆர்.டி. தங்க மாளிகை ரூ.50 லட்சம். தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ரூ.50 லட்சம். ராசி சீட்ஸ் நிறுவனம் ரூ.50 லட்சம். டி.எல்.எப். பவுன்டேசன் நிறுவனம் ரூ.50 லட்சம். ஜி.வி.ஜி. பேப்பர் மில்ஸ் ரூ.40 லட்சம். பல்லவா டி.இ. நிறுவனம் ரூ.30 லட்சம். ஸ்ரீசேரன் நிறுவனம் ரூ.30 லட்சம்.
வி.எஸ்.எம். வீவ்ஸ் நிறுவனம் ரூ.30 லட்சம். சூப்பர் ஆட்டோ போர்க் பிரைவேட் லிமிடெட் ரூ.25 லட்சம். தி கொங்கு ரூ.25 லட்சம். சாகோ சர்வ் ரூ.25 லட்சம். கே.கே.பி.கே.எச். ரூ.25 லட்சம். அக்னி ஸ்டீல் ரூ.25 லட்சம். கார்ப் நாமக்கல் ரூ.25 லட்சம். ரெனாட்டஸ் ரூ.25 லட்சம். பொன் பியூர் நிறுவனம் ரூ.25 லட்சம். அட்ரியா கன்வர்ஜென்ஸ் நிறுவனம் ரூ.25 லட்சம். ரூட்ஸ் முட் நிறுவனம் ரூ.25 லட்சம். ரூட்ஸ் இன்டஸ் ரீஸ் நிறுவனம் ரூ.25 லட்சம். ஸ்ரீஹரி கிருஷ்ணா பேப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.20 லட்சம். டேன்போஸ் நிறுவனம் ரூ.15 லட்சம். கோல்டு ஈ நிறுவனம் ரூ.11 லட்சம். எஸ்.வி.எஸ். ஆயில் மில்ஸ் நிறுவனம் ரூ.11 லட்சம்.
இதேபோல், காஞ்சி காமகோடி பீடம், மெட்ராஸ் டாக்கீஸ், ஜி.வி.ஜி. கிராவ்ட் பிரைவேட் லிமிடெட், சிதம்பரம் பயர் ஒர்க்ஸ் பேக்டரி, ஜி.வி.ஜி. இண்டஸ்ட்ரிஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.வி.ஏ. சின்டெக்ஸ், எஸ்.வி.பி.பி. எஸ்.பி., கே.டி.வி. ஹீல், கே.ஓ.ஜி. கே.டி.வி., பேப்டெக், தமிழ் மான், ராசி அக்ரிகல்சர், கே.கே.எஸ்.கே., ஐ டெக், கே.ராமசாமி, ஆர்.கே.உமாதேவி, எம்.கே.அழகிரி ஆகியோர் தலா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளனர்.
இதுதவிர, பிற நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கொரோனா நிவாரணத்திற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு கடந்த 31-ந்தேதி வரை வழங்கப்பட்ட மொத்த தொகை ரூ.36 கோடியே 34 லட்சத்து 2 ஆயிரத்து 529 ஆகும். நன்கொடை அளித்த அனைவருக்கும் தனித்தனியே அவ்வப்போது ரசீதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story