ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழகத்தில் கைது எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டது


ஊரடங்கு உத்தரவு மீறல் தமிழகத்தில் கைது எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டது
x
தினத்தந்தி 3 April 2020 4:00 AM IST (Updated: 3 April 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக தமிழகத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு, தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. பொது மக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதற்கு தடையில் இருந்து விதி விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட் கள் வாங்க செல்வதாக கூறிவிட்டு, 10 சதவீத பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் வாகனங்களில் வலம் வருகிறார்கள். இதுபோல் வலம் வருபவர்கள் மீது கைது நடவடிக்கை, வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி தமிழகத்தில் 42 ஆயிரத்து 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 46 ஆயிரத்து 970 பேர் மீது கைது நடவடிக்கை பாய்ந்தது என்று டி.ஜி.பி. அலுவலகத்தில் தெரிவித்தனர். 35 ஆயிரத்து 206 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அபராத தொகையும் ரூ.16.28 லட்சம் வசூலிக்கப்பட்டது.

நேற்று இரவு நிலவரப்படி, கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தொட்டுவிட்டது என்று டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் கூறினார்கள். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வெளியில் நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Next Story