மாநில செய்திகள்

போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல் + "||" + Police, 108 for ambulance staff Special pay - Dr. Ramadas emphasis

போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
போலீசார், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணிகளில் அரசு டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் காட்டும் தன்னலமற்ற ஈடுபாடும், தங்களின் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் அர்ப்பணிப்பு உணர்வும் பாராட்டத்தக்கவை. அதேபோல், ஆம்புலன்ஸ் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் காட்டும் தியாக உணர்வும் உன்னதமானவை.

இத்தகைய டாக்டர்கள், நர்சுகள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருந்தார். இத்தகைய பணி அங்கீகாரமும், சிறப்பு ஊதியமும் இன்னும் பல பிரிவினருக்கு வழங்கப்பட வேண்டும்.

அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் கொரோனா என்ற கொடிய கிருமி தமிழகத்தில் பரவிவிடக்கூடாது என்பதற்காக தங்களின் குடும்பங்களை விட்டுவிட்டு இரவு, பகலாக சாலைகளில் காவல் காத்தும், கண்காணித்தும் வருகிற போலீசார். பணியின்போது கொரோனா தாக்கும் ஆபத்து இருக்கும் போதிலும், அதை பொருட்படுத்தாமல் துணிந்து பணியாற்றுகின்றனர். ஊரடங்கு 90 சதவீதத்துக்கும் மேல் வெற்றி பெற்றிருப்பதற்கு காவல்துறைதான் முக்கிய காரணமாகும்.

அதேபோல், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் மருத்துவத் துறையினருக்கு உறுதுணையாக 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா பரவ சிறிதும் வாய்ப்பளித்துவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் தூய்மைப்பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களின் தியாகத்தையும், தன்னலமற்ற சேவையையும் அங்கீகரிக்கும் வகையில் ஒருமாத சிறப்பு ஊதியமும், ரூ.50 லட்சத்திற்கான காப்பீடும் வழங்க வேண்டும். அத்துடன் காவலர் நிலையில் உள்ளவர்களுக்கு எரிபொருள்படி வழங்க அரசு முன்வரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சேலத்தில் பரபரப்பு போதை ஊசி போட்ட சிறுவன் சாவு நண்பர்களிடம் போலீசார் விசாரணை
சேலத்தில் போதை ஊசி போட்ட சிறுவன் உயிரிழந்தான். இது தொடர்பாக அவனது நண்பர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
2. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு
தர்மபுரியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் நேற்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
4. விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
விழுப்புரம் அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகள் போலீசார் ரோந்து சென்று மூடினர்
விழுப்புரம் நகரில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட கடைகளை போலீசார் ரோந்து சென்று மூட நடவடிக்கை எடுத்தனர்.