கொரோனா தொற்று ஜாதி, மத, பேதமின்றி பரவக்கூடியது; அதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி


கொரோனா தொற்று ஜாதி, மத, பேதமின்றி  பரவக்கூடியது; அதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் -முதல்வர் பழனிசாமி
x
தினத்தந்தி 4 April 2020 11:37 AM GMT (Updated: 4 April 2020 11:37 AM GMT)

கொரோனா தொற்று ஜாதி, மத, பேதமின்றி அனைவருக்கும் பரவக்கூடியது; அதற்கு மதச்சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறி உள்ளார்.

சென்னை

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி இருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்று ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக்கூடியது, இதற்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க கொடுக்கப்பட்ட கால அவகாசம் காலை 6 மணி முதல் 1 மணிவரை மட்டுமே. விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

அரசின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக மதத்தலைவர்கள் ஓப்புதல் அளித்து உள்ளனர்

மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்.நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்கிற புகார் மீது, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறி உள்ளார்.


Next Story