அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல சிறப்பு பார்சல் ரெயில் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல சிறப்பு பார்சல் ரெயில் இயக்கம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அத்தியாவசிய தேவைகளுக்கான பார்சல்களை எடுத்து செல்லும் வகையில் கீழ்க்கண்ட சிறப்பு பார்சல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-கங்காரியா(வண்டி எண்: 00908) இடையே சிறப்பு பார்சல் ரெயில் வருகிற 8-ந்தேதி இரவு 10 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
* யஸ்வந்த்பூர்-கோரக்பூர்(00607) இடையே சிறப்பு பார்சல் ரெயில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-ந்தேதி மதியம் 1 மணிக்கு யஸ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கோரக்பூர்-யஸ்வந்த்பூர்(00647) இடையே சிறப்பு பார்சல் ரெயில் வருகிற 8 மற்றும் 15-ந் தேதிகளில் மதியம் 1 மணிக்கு கோரக்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story